search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தலைமை நீதிபதி"

    அயனாவரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கை எடுத்து தீர்ப்பு வழங்குவோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். #chennaigirlharassment #chennaihighcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, அயனாவரத்தில் 11 வயது சிறுமியை 17 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அதேபோல, திருவண்ணாமலையில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்ணை 8 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அண்மை காலங்களில், தமிழகத்தில் அதிகம் நடக்கின்றன.

    எனவே, பெண்களுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று வக்கீல் சூரிய பிரகா‌ஷம் கோரிக்கை விடுத்தார்.

    இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. தாமாக முன்வந்து வழக்கு எல்லாம் பதிவு செய்ய முடியாது. சிறுமி தொடர்பான வழக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் போலீசார் விரைவாக விசாரிப்பார்கள். கோர்ட்டும் விரைவாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்கும் என்று கருத்து கூறினர்.

    இதையடுத்து பாடம் நாராயணன் என்பவர் எழுந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பாலியல் கொடுமைக்கு உள்ளான சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கவேண்டும். ஆனால், போலீசார் இந்த கமிட்டியிடம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை இதுவரை ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.

    இதே கருத்தை வலியுறுத்தி, குழந்தைகள் நல கமிட்டியின் வக்கீல் மெக்ரூனிஷாவும் வாதம் செய்தார். பின்னர், பல மாவட்டங்களில், குழந்தைகள் நல கமிட்டி அமைக்கப்படாமலும், அதிகாரிகள் நியமிக்கப்படாமலும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஏற்கனவே, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நல கமிட்டிக்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இப்போது மீண்டும் அதே உத்தரவை பிறப்பிக்கின்றோம். 11 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.


    இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி, ‘11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைதான 17 பேர் நேற்று மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை வக்கீல்கள் கொடூரமாக தாக்கினார்கள். போலீஸ் காவலில் உள்ள கைதிகளை வக்கீல்கள் தாக்கியது சட்டப்படி குற்றம்’ என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள் எந்த பதிலும் சொல்லவில்லை. #chennaigirlharassment #chennaihighcourt

    ×